2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மண்வெட்டிக்குள் ஒரு கருப்பாடு?

Editorial   / 2018 மார்ச் 16 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலைய அரசியலில் கடும் நெருக்கடியான நிலைமையொன்று விரைவில் ஏற்பட்டுள்ளதென தகவல்கள்  வெளியாகியுள்ளன.

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர், அந்த நெருக்கடி நிலைமை, இன்னுமின்னு அதிகரித்துள்ளது என்றும், அதனால், உயர்மட்ட அங்கத்தவர்களிடத்தில் சில மனக்கசப்புகள் சங்கடங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் அந்தத் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மலையகத்தில் இரண்டாவது கட்சியென கூறப்படும் மலையக மக்கள் முன்னணியின் தலைமைக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்படுவதாக அறியமுடிகின்றது.

அந்த முன்னணியின் தற்போதைய தலைவரான கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து வருகைதந்தவர். ஆகையால் அவரை நீக்கிவிடுவதற்கான பரப்புரைகளே முன்னெடுக்கப்படுவதாக அறியமுடிகின்றது.

ஆகையால், அந்தக் கட்சியை சேர்ந்த ஒருவரே, அந்த முன்னணியின் தொழிற்சங்கமான மலையக தொழிலாளர் முன்னணியின் தோட்டக்கமிட்டி தலைவர்கள் உள்ளிட்டோருக்கு, வே. இராதாகிருஷ்ணன் தொடர்பில் பொய்யான தகவல்கள் அடங்கிய, ​‘மொட்டைக் கடிதங்களை’ தன்னுடைய செலவில் அனுப்பியுள்ளதாகவும் கட்சியின் தலைமை பதவியை சூழ்ச்சியின் ஊடாக கைப்பற்றும் நோக்கிலேயே இவ்வாறு செய்கின்றார் என்றும் அவர்கள் இருவருக்கும் நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .