2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மத்திய வங்கிக்கெதிராக வீரவன்ச போர்க்கொடி

Kamal   / 2019 பெப்ரவரி 18 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னுக்கு பின் முரணான நிலைப்பாட்டை இலங்கை மத்திய வங்கி, கொண்டுள்ளதெனத் தெரிவித்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி., இதனூடாக எந்த மோசடியை மறைப்பதற்கு, மத்திய வங்கி முயற்சிக்கின்றதென வினவினார்.  

பிரபல வர்த்தகரான சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு சொந்தமான சர்சைக்குரிய நிறுவனங்களுடன் இலங்கைய மத்திய வங்கி  தொடர்ந்து வியாபார செயற்பாடுகளை முன்னெடுக்கின்றதென குற்றஞ்சாட்டிய அவர், மேற்படி விவகாரம் தொடர்பில், மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமிக்கு கடிதமொன்றையும் நேற்று (17) அனுப்பிவைத்துள்ளார்.  

மத்திய வங்கியால் 2018.02.01 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில், ஈ.டி.ஐ எனப்படும் இலங்கை நிதி நிறுவனத்தின் செயற்பாடுகள் மத்திய வங்கி அதிகாரிகளால் மேற்பார்வை செய்யப்படுமெனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், 2019.02.11 ஆம் திகதி மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில், ஈ.டி.ஐ நிறுவனத்தின் நிர்வாகத்தினால் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு மத்திய வங்கி பொறுப்பேற்காதென அறிவிக்கப்பட்டுள்ளதெனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.  

அதேபோல், ஈ.டி.ஐ நிறுவனத்தின் தலைவருக்கு, மத்திய வங்கி 2018.02.27 அன்று அனுப்பியுள்ள கடிதத்தில் 75 மில்லியன் ​அமெரிக்க டொலருக்கு குறித்த நிறுவனத்தை விற்பனை செய்ய மத்திய வங்கி இணங்கியுள்ளதென தெரிவித்த அவர், கூட்டு நிறுனமொன்றை இவ்வாறு விற்பனை செய்யும் போது பங்குகள் அடிப்படையில் நியாயமான தீர்வொன்று கிடைக்காதெனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, சுபாஸ்கரன் அல்லிராஜாவின் நிறுவனத்துக்கு மேற்படி நிதித்தொகையில் 54 மில்லியன் டொலர்​களை  இரண்டு தவணைகளாக செலுத்த மத்திய வங்கி இணங்கியுள்ளதாகவும் எஞ்சிய 16 மில்லியன் அமெரிக்க டொலர்களை அந்த நிறுவனத்தைக் கொண்டு இலாபத்தை ஈட்டிக்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்படவுள்ளதெனவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும்,  மத்திய வங்கி 2019.02.11 அன்று விடுத்துள்ள அறிக்கையில் எஞ்சிய தொகையான 16 மில்லியன் டொலர்களை செலுத்த மத்திய வங்கி இணங்கியுள்ளதாகவும், அதனால் மேற்படி கூட்டு நிறுவனங்களில் ஒரு நிறுவனத்தின் மூலதன வைப்புத் தொகையான 12 மில்லியன் ரூபாவை மத்திய வங்கி மறைந்து வைத்துள்ளதால் தமது வாடிக்கையாளர்களை மத்திய வங்கி ஏமாற்றுகின்றதெனவும் சாடியுள்ளார்.

மேற்படி, வர்த்தம் இலங்கையின் நிதிச் சட்டத்துக்கு முரணானது எனவும், இந்த வர்த்தக நடவடிக்கைய மத்திய வங்கி மீதான நம்பிக்கையை முழுமையாக சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளதெனவும்   தீவிரவாதச் செயற்பாடுகளுக்காக நிதி மோசடி செய்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள அல்லிராஜா பாஸ்கரனின் நிறுவனத்துக்கு  இலங்கை நிறுவனம் ஒன்றை விற்பனை செய்வது பொருத்தமற்றது  என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X