2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘மத்ரசாக்கள் தொடர்பில் ஒழுங்குமுறை வேண்டும்’

Editorial   / 2019 மே 17 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரபு மத்ரசாக்கள் தொடர்பில் ஓர் ஒழுங்குமுறை உருவாக்கப்பட வேண்டுமென கோரியுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, அதற்காக சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டுமென அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

“மத்ரசாக்களின் பாடவிதானங்கள், கற்பிப்பவர்கள் மற்றும் மத்ரசாக்களுக்கு பணம் கிடைக்கும் வழிமுறைகள் தொடர்பில் ஒரு ஒழுங்குமுறை ஏற்படுத்தப்பட வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.   

கொழும்பு-07, இலங்கை மன்றக் கல்லூரியில், நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

இந்த ஊடக சந்திப்பில் முஸ்லிம் பிரதிநிதிகளான அமைச்சர் கபீர் ஹாசிம், முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், பேரியல் அஷ்ரப் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.   

முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடைக்கு அரசாங்கத்தால் தடைவிதிக்கப்பட்டது. அந்தத் தடையை முஸ்லிம் பெண்கள் பின்பற்றியுள்ளனர். அதேபோன்று முஸ்லிம் சமூகத்தால் முடியுமான அனைத்தும் செய்யப்பட்டுள்ளது என்றார்.   

இந்நிலையில், முஸ்லிம்களால் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசித்துக் கொண்டிருக்கின்றோம்” என்றும் அவர் மேலும் கூறினார்.  

“துரதிஷ்டவசமாக ஒரு சிலர் அடிப்படைவாதிகளாக மாறியதால் சமூகம் மற்றும் இனம் என்றடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து அதனை தோற்கடிக்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .