2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’முந்தி வைத்து பிந்தி சொன்னார்’: அடைக்கலநாதன் விளக்கம்

Gavitha   / 2020 ஒக்டோபர் 30 , மு.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

துமிந்த சில்வாவின் விடுதலைக்கான மகஜரில் கையொப்பமிட்டதால் வந்த எதிர்ப்பைத் தணிப்பதற்காகவே, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான மகஜரொன்றைத் தயாரிக்குமாறு தன்னிடம் மனோ கணேசன் எம்.பி கோரியுள்ளாரென்றுத் தான் கருதுவதாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

துமிந்தவின் விடுதலைக்கு கையொப்பத்தை ஏற்கெனவே இட்டுள்ள மனோ எம்.பி, தன்னைத் தற்போது தற்காத்துக்கொள்ளவே, என்னையும் சுமந்திரன் எம்.பியையும் கோர்த்து விட்டுள்ளார் என்றும், செல்வம் எம்.பி தெரிவித்தார்.

இது தொடர்பில் தமிழ்மிரருக்கு தொடர்ந்துரைத்த அவர், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான​ ஏற்பாடுகளைச் செய்யுமாறு, தமிழ் முற்போக்கு் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி, தன்னிடம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் அதனால், அதற்கான ஏற்பாடுகளைத் தான் செய்வதாக அவரிடம் பதிலளித்திருந்ததாகவும் அவர் கூறினார்.

மரண தண்டனைக் கைதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கையொப்பம் திரட்டப்பட்ட மகஜரில் தாங்கள் கையொப்பமிட்டுள்ள நிலையிலேயே, தன்னிடம் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான கோரிக்கையை முன்வைத்திருந்தார் என்றும், அடைக்கலநாதன் எம்.பி கூறினார்.

துமிந்த சில்வாவையும் அரசியல் கைதிகளையும் ஒருபோதும் சம்பந்தப்படுத்த முடியாது. அதனால், அரசியல் கைதிகள் விடயத்தில் கவனம் செலுத்துவதாகவே தான் உறுதியளித்ததாகவும், அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .