2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’மனசாட்சியுள்ள எம்.பிகள் எதிர்த்து வாக்களிக்க வேண்டும்’

Nirosh   / 2021 மே 17 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்புத்துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு திருத்தச்சட்டமூலத்துக்கு மனசாட்சியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருக்கும் மக்கள் விடுதலை முன்னணியின்யின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா, வர்த்தமானி அறிவித்தல்கள்போல, இதனைத் திரும்பப் பெறமுடியாது. எனவே இது ஆபத்தானதெனவும் எச்சரித்துள்ளார்.

ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று முன்தினம் (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், கொரோனா வைரஸ் தொடர்பில் எல்லோரதுக் கவனமும் திரும்பியிருக்கின்ற நிலையில், கொழும்புத்துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு திருத்தச்சட்டமூலத்தை அரசாங்கம் பாராளுமன்றில் நிறைவேற்றிக்கொள்ளப் பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இச்சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத் தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, அதனை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கான திகதியை அரசாங்கம் அறிவித்து அதனை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிப்பதிலிருந்து, அரசாங்கம் அதனை நிறைவேற்றுவதில் எவ்வளவு அவசரம் காட்டுகிறதென்பது தெரிவதாகவும் அவர் கூறினார்.

இச்சட்டமூலம் தொடர்பில் பொதுமக்களிடையே பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு முன்னரே இதனை நிறைவேற்றிக்கொள்ளப் பார்ப்பதாகவும், சமூகத்துக்குள் இதுத் தொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்படுவதற்கு முதலில் காலஅவகாசமொன்றை வழங்க வேண்டுமென கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்திருந்ததாகவும் கூறினார்.

பெரும்பான்மையில்லாது இச்சட்டமூலத்தை நிறைவேற்ற முடியாதென நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கலாமென தான் நம்புவதாகவும் கூறிய அவர், நாட்டுக்குள் புதிதாக இணைக்கப்பட்ட இடத்தை நிர்வகிப்பதுத் தொடர்பான சமர்ப்பிக்கப்பட்டுள்ள இச்சட்டமூலத்தை நிறைவேற்றியதன் பின்னர் அதனை மாற்றியமைக்க முடியாது. எனவே இது ஆபத்தான ஒன்றெனவும் கூறினார்.

அரசாங்கம் வெளியிடும் வர்த்தமானி அறிவித்தல்களை திரும்பப் பெறுவதுபோல, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு திருத்தச்சட்டமூலத்தைத் திரும்பப் பெற முடியாதெனவும் தெரிவித்ததோடு, எனவே மனசாட்சியுள்ள எம்.பிகள் இச்சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். தேசிய மக்கள் இதனை எதிர்த்து வாக்களிக்கும் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .