2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மன்னார் மனித எச்சங்கள்: ஆய்வுக்குழுவில் ஒருவர் இணைப்பு

Editorial   / 2019 ஜனவரி 19 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்களை, அமெரிக்காவுக்கு ஆய்விற்காகக் கொண்டுச் செல்லும் குழுவில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவரை இணைத்துக்கொள்ள, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தைப் பரிசீலனைச் செய்த பின்னர், மன்னார் நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியிருந்தது.

மன்னார், மனிதப் புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகளை அமெரிக்காவிலுள்ள புளோரிடாவுக்கு, கார்பன் பரிசோதனைக்காக எடுத்துச்செல்வதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 24ஆம் திகதி அதிகாலை ஆய்வுக் குழுவினர் அமெரிக்கா நோக்கி பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .