2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மரண தண்டனை தொடர்பான மனுவின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Editorial   / 2019 ஜூலை 17 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரணத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நால்வருக்கு எதிராக மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள தீர்மானத்தை ரத்துச் செய்யுமாறு, ஊடகவியலாளர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனு குறித்த அடிப்படை விடயங்களை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர்  யசன்ன கோதாகொட (தலைவர்) தலைமையிலான ஐவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதியரசர் குழாமால் இந்த மனுவை விசாரிப்பதற்கு அனுமதி வழங்குவதா இல்லையா? என்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படவிருந்தது.

எனினும் மரண தண்டனையை அமுல்படுத்துவதை தடுக்குமாறு, மேல் நீதிமன்றத்தால் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி வரை  த​டையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், தமது தீர்ப்பை அறிவிக்காமலிருக்க ஐவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதியரசர்கள் குழாம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, ஊடகவியலாளர் தாக்கல் செய்த மனுவை ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .