2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மேல் மாகாணத்தில் வீதி தடைகள் இன்று முதல் அமுல்

A.K.M. Ramzy   / 2020 ஒக்டோபர் 29 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்  காலப்பகுதிக்குள் பல்வேறு வைபவங்கள் தொடர்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. தற்போது பொதுமக்கள் ஒன்று கூடுதல், மண்டபங்களில் ஒன்று கூடல் இந்தக் 

காலப்பகுதியில் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ள பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

 மேலும், மேல் மாகாணத்துக்குள் பிரவேசிப்பது அல்லது அங்கிருந்து வெளியேறுவது முழுமையாக தடை செய்யப்பட்டிருப்பதாகவும் மேல் மாகாணத்துக்குள்

பிரவேசிக்கும் அனைத்து நுழைவாயில் அமைந்துள்ள இடங்களில் பொலிஸ் வீதி தடைகளை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த

பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன  இந்த வீதி தடைகள் இன்று முதல் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .