2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’முஸ்லிம்களுக்கு இரு சட்டங்களா?’

Editorial   / 2020 நவம்பர் 24 , மு.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதி அமைச்சர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவருக்கு நெருக்கமான முஸ்லிம்களுக்கு ஒரு சட்டத்தையும், ஏனைய முஸ்லிம்களுக்கு மற்றொரு சட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.

வரவு-செலவுத் திட்டம் மீதான நேற்றைய குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 “புதிதாக நான்குப் பல்கலைகழகங்களை அமைப்பதற்கு ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒரு பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு 250 மில்லியன் செலவிடப்படவுள்ளது. 250 மில்லியனை வைத்துக்கொண்டு பாடசாலைக்குத் தேவையான கட்டடமொன்றைக்கூட அமைக்க முடியாது” என்றார்.

அதேபோல, ஒரு இலட்சம் கிலோ மீற்றர்  வீதி அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானாக இல்லை. எனவே, யாரை ஏமாற்றுவதற்காக இத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன எனக் கேள்வியெழுப்பிய அவர், பாலமொன்றை அமைப்பதற்கு 7 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் பாலமொன்றை நிர்மாணிக்க முடியுமா என்பது தெரியாது.

“வரவு- செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்களை நிறைவு செய்வதற்கு கடனைப் பெற்றுக்கொள்ள வேண்டும் ஆனால் கடனைப் பெற்றுக்கொள்வதற்கு இடமில்லை” என்றார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த இரத்மலானையைச் சேர்ந்த முஸ்லிம் பெண்ணொருவர் கடந்த 15ஆம் திகதி உயிரிழந்திருந்தார். இவருக்கு மேற்கொள்ளப்பட்ட முதல் பிசிஆர் பரிசோதனையில் அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எரிக்கப்படுகிறார்கள். ஆனால், அமைச்சர் ஒருவர் அலைபேசி வழியாக அங்கிருந்த சுகாதார அதிகாரிகளுக்கு அழைப்பெடுத்துள்ளார். அதன் பின்னர்  மீண்டும்  பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனக் கூறி அச்சடலத்தை அடக்கம் செய்துள்ளனர்.

“நாட்டில் இரண்டு சட்டங்கள் இருப்பதையே இது காட்டுகிறது. நீதி அமைச்சர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவருக்கு நெருக்கமான முஸ்லிம்களுக்கு ஒரு சட்டத்தையும், ஏனைய முஸ்லிம்களுக்கு மற்றொரு சட்டத்தையும் நடைமுறைப்படுத்துகிறார்.” எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .