2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’மஹிந்த அணி வேட்பாளரை யானை வெல்லும்’

Editorial   / 2019 ஏப்ரல் 19 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.கமல்

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்படுவாரெனத் தெரிவித்த அமைச்சர் அஜித் பி பெரேரா, மஹிந்த அணியின் வேட்பாளரை இலகுவாக வெற்றிக்கொள்வோமெனவும் தெரிவித்தார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தொடர்பிலான செயற்பாடுகள் தற்காலத்தில் சூடுபிடித்துள்ளதெனவும் 19ஆவது திருத்தின் பின்னரும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ந​டைமுறையில் உள்ளதே அதற்கு காரணமெனவும் தெரிவித்தார்.

அதனால் அடுத்த தேர்தலிலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியொருவரே தெரிவு செய்யப்படுவாரெனத் தெரிவித்த அவர், வடக்கு, கிழக்கு, தெற்கு என சகல பகுதி மக்களின் ஆதரவையும் பெற்றுக்கொள்ளகூடிய வேட்பாளருக்கே வெற்றி கிட்டுமெனவும் கூறினார்.

இவ்வாறிருக்கையில், இலங்கை ஜனநாயக பண்புகள் பற்றி பரந்த அறிவை கொண்ட நாடாக காணப்படுகின்ற போதும் ராஜபக்‌ஷர்கள் சவூதி அரேபியா, குவைட் உள்ளிட்ட நாடுகளை போன்று குடும்ப ஆட்சியை தொடரவே முயற்சிக்கின்றனரெனவும் அவர் சாடினார்.

மஹிந்த ஆட்சியில் அடக்குமுறைகளை பிரயோகித்தே குடும்ப ஆட்சி தொடரப்பட்டதென குற்றஞ்சாட்டிய அவர், மஹிந்த அணியினர் இனவாதிகள் என்பால் அந்த அணி சார்பில் எவர் களமிறங்கினாலும் அவர்களை இலகுவாக வெற்றிகொள்ள ஐ.தே.க வுக்கு இயலுமை உள்ளதெனவும் தெரிவித்தார்.

அதேபோல், பாதுகாப்பு அமைச்சர்களான சஜித் பிரேமதாஸ மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கிடையிலான மோதல் கட்சியுடன் தொடர்புபட்டது அல்வெனத் தெரிவித்த அவர், அந்த முரண்பாடு விரைவில் மறைந்துவிடுமெனவும் கூறினார்.

தே​ர்தல் காலங்களில், இவ்வாறான முரண்பாடுகள் வருவதை தவிர்க்க முடியாதெனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் ​வேட்பாளர் யார் என்பதை ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அறிவிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னம் யானை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .