2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மஹிந்த அணி வேட்பாளர்; ‘ஐ.தே.கவுக்கே குழப்பம்’

Editorial   / 2018 ஒக்டோபர் 15 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.கமல்

 

நல்லாட்சி அரசாங்கம், பொய்களால் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ள பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படாமலிருப்பது, ஐக்கிய தேசியக் கட்சிக்கே பெரும் பிரச்சினையாக உள்ளதென்றும் கூறினார்.  

ஹோமாகம - கொடகமவில், நேற்று முன்தினம் (13) இடம்பெற்ற “எளிய” மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமது தரப்பு ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதே, ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும் பிரச்சினையாக உள்ளதென்றும் இது விடயத்தில், தமக்கு அவ்வாறான பிரச்சினைகள் எவையும் இல்லையென்றும் கூறியதோடு, வேட்பாளர் யார் என்பதை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உரிய தருணத்தில் தீர்மானித்து அறிவிப்பாரென்றும் கூறினார்.  

ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தான், தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யாரெனப் பெயரிடுவதில் குழப்பம் ஏற்பட்டதென்றும் இவ்வாறிருக்க, மக்களிடத்தில் போலிக் கருத்தாடல்களைப் பரவச் செய்து, மக்களை ஏமாற்ற முயற்சி செய்கின்றனரென்றும், கோட்டாபய குற்றஞ்சாட்டினார்.  

சர்வதேசச் சக்திகளுடன் இணைந்து, சிறுபான்மை மக்கள் மத்தியில் போலி அச்சத்தை ஏற்படுத்தும் முயற்சிகளும் காணப்படுகின்றன. போலிப் பிரசாரங்களைச் செய்துவிட்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம், போலிப் பிரசாரத்தின் மூலமே அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டார். 

அதனாலேயே, ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தல விமான நிலையம் உள்ளிட்டவை தொடர்பிலும், போலி கருத்துகளை ​வெளியிடுவதாகக் குற்றஞ்சாட்சிய அவர், கடந்த அரசாங்கத்துக்கு, சிறந்த திட்டமிடலொன்று இருந்ததென்றும் தற்போதைய அரசாங்கத்திடம், அதுபோன்ற திட்டமிடல்கள் எவையும் இல்லையெனவும் தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கத்துக்கு, பொருளாதாரத்தை வழிநடத்திச் செல்வதற்கான தூர நோக்கு இல்லையென்றும் கூறினார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X