2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’மஹிந்த ராஜபக்ஷவின் உளவாளி நானல்ல’

Yuganthini   / 2017 ஜூன் 26 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-லஹிரு பொத்முல்ல

 

ஜாதிக ஹெல உறுமயவின் அங்கத்தவராக இருந்தபோது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒரு உளவாளியாக செயற்பட்டார் என்று, ஜாதிக ஹெல உறுமயவால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை, பிவிதுறு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில, இன்று (26) மறுத்தார்.

 

எவ்வாறாயினும், ஜாதிக ஹெல உறுமயவில், முன்னாள் ஜனாதிபதிக்கு உளவு பார்த்தது மற்றொரு அங்கத்தவரே என்று அவர் கூறினார்.

“கடந்த 1998ஆம் ஆண்டு, பயங்கரவாத எதிர்ப்பு இயக்கத்துடன் இணைந்த ஒரு உளவுத் துறை அதிகாரி, ஜாதிக ஹெல உறுமயவின் ​​செயலாளர் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவுடன் நெருக்கமானார். அந்த நபர், ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய குழுவுடன் இணைந்து, உயர்பதவி கொண்ட அமைச்சராக ஆகினார். எனவே, அமைச்சருக்கு மிகவும் நெருக்கமான உளவுத்துறை அதிகாரியொருவர் இருக்கும் போது, நான் எதற்கு அவ்வாறு செயற்பட வேண்டும்” என்று அவர் கேள்வியெழுப்பினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .