2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’மஹிந்தவுக்கு மட்டுமல்ல சந்திரிக்காவுக்கும் முடியாது’

Editorial   / 2018 ஓகஸ்ட் 21 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருக்கு மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான எந்தவொரு சந்தர்ப்பமும் இல்லை என அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், வடமத்திய மாகாணத்தில் மேற்கொள்ளப்பட உள்ள, நீர்பாசன திட்டம் தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் உள்ள மகாவலி மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அமைச்சர் துமிந்த திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து, உயர் நீதிமன்றம் எத்தகைய தீர்ப்பினை வழங்கும் என்பது தெரியாது.

ஆனால் நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு அமைவாக அவரால் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது. அவரால் மட்டுமல்ல சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் அதே​ நிலைதான்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பிளவு ஏற்பட்டுள்ளது. ஆகவே இதனை மூடிமறைக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முயற்சி செய்கிறார்.” எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .