2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

‘மஹிந்தவுக்கே எதிர்க்கட்சித் தலைவர் ’

Editorial   / 2018 டிசெம்பர் 17 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சியாக செயற்படுமளவுக்கு அதிக உறுப்பினர்களைக் கொண்டிருப்பதால், எதிர்கட்சித் தலைவர் பதவி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கே வழங்கப்பட வேண்டுமென சபாநாயகரை வலியுறுத்தவுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனவே மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குமாறு நாம் சபாநாயகரை வலியுறுத்தவுள்ளதாகவும் தற்போதைய நிலையில் மஹிந்தவுக்கு அந்தப் பதவியை வழங்காமலிருக்க சந்தர்ப்பம் இல்லையென்றும் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

அமைச்சரவையை நியமிப்பது இலகுவான காரியம் அல்ல. அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக இருக்க வேண்டும். எனவே தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டால் மாத்திரம் தான் இந்த அமைச்சரவை எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படாது.

அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமானால் ஜனாதிபதியால் அதனை நிராகரிப்பதற்கு வாய்ப்புள்ளது என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .