2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோத நடவடிக்கை’

Editorial   / 2018 ஒக்டோபர் 16 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது தடை செய்யப்பட்ட நடவடிக்கையென, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

சீகிரியா பிரதேச பாடசாலையொன்றின் பதில் அதிபர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு, பாடசாலை மாணவர்களும் பெற்றோரும் நேற்று (15) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.

இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்தப் போதே, சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் எச். எம். ஆரியரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துவது முற்று முழுதான சட்டவிரோத நடவடிக்கையாகும்.

18 வயதுக்கு குறைவான மாணவர்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளின் பிரதிபலன் என்னவென்று அவர்களுக்கு போதிய தெளிவு இல்லை. எனவே அவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துவது சட்டவிரோத நடவடிக்​கை  என்றும், இது தொடர்பில், 1929 என்ற இலக்கத்துக்கு முறையிட்டால், சட்டநடவடிக்கை எடுப்பதாகவும், சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .