2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மாற்றுச் சிகிச்சைகளுக்கு இலங்கையில் தடை

Editorial   / 2018 பெப்ரவரி 26 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சந்துன் ஜயசேகர

வெளிநாட்டவர்களிடமிருந்து சிறுநீரகங்களைப் பெற்று, இலங்கையில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதற்கு தடை விதித்துள்ள சுகாதார அமைச்சு, அவ்வாறு சிறுநீரகங்களை பெறுவோர் எந்தவொரு கட்டணத்தையும் செலுத்தத் தேவையில்லை என்றும் சிறுநீரகங்களைத் தானமாகக் கொடுப்பதற்கு முன்வருவோருக்கு, பணம் செலுத்தத் தேவையில்லை என்றும், பணித்துள்ளது.

இந்திய பிரஜைகளால், சிறுநீரகங்கள் வழங்கப்பட்டு, இலங்கையிலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் சிறுநீரக மாற்று சிகிச்சைகள் செய்யப்படுவதாக, சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகியதையடுத்தே, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, மேற்கண்டவாறு பணித்துள்ளார்.

“மனித உறுப்புகளை தானம் செய்தல்” எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,  

உறுப்புகளை தானம் செய்வதற்கு முன்வருவோருக்கு, ஒரு நிவாரணத் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறிய அவர், அவர்கள், வாழ்க்கை முழுவதும், அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்றுக்கொள்வதற்கான திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.  

“மனித உறுப்புகளை தாம் செய்வதில், இலங்கை, ஒரு நிலை​யான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்பதையிட்டு நான் பெறுமையடைகின்றேன். எமது நாட்டிலுள்ள அர்ப்பணிப்புமிக்க, உயர் தொழில்முறை வைத்தியர்கள், சிறுநீரகங்கள், இருதயங்கள் மற்றும் பிற உறுப்பு மாற்று சிகிச்சைகளை, குறைந்த சலுகைகளுடன், மிகவும் வெற்றிகரமான முறையில் செய்து முடித்துள்ளனர்” என்று அவர் மேலும் கூறினார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .