2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘மின்சாரப் பேச்சு நின்னு ​போச்சு’

Editorial   / 2017 செப்டெம்பர் 20 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சார ஊழியர்கள் முன்னெடுக்கும் வேலைநிறுத்தப் போராட்டம், நேற்றும் தொடர்ந்தது. இதனால், நாட்டின் சிற்சில பிரதேசங்களில் மின்சார தடையேற்பட்டுள்ளது.  

இந்நிலையில், தங்களுடைய கோரிக்கைகள் தொடர்பில் தொழிலாளர், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சபரகமுவ அபிவிருத்தி அமைச்சர் ஜோன் செனவிரத்னவுக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை எவ்விதமான தீர்மானமும் இன்றி நிறைவடைந்துள்ளது.   

பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அமைச்சர் ஜோன் செனவிரத்ன மேற்கொண்ட தலையீட்டை வரவேற்ற, இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க ச​ம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால், இந்த பேச்சுவார்த்தையில் ஏற்படுத்தும் இணக்கப்பாட்டுக்கு அமைய, கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு, மின்சார சபை அதிகாரிகள் எழுத்துமூலம் உறுதிப்படுத்தவேண்டும்.  

அவ்வாறு உறுதிப்படுத்தினால் மட்டுமே, தங்களுடைய வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடுவோம் என்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் எடுத்தியம்பியுள்ளனர்.   

சுமார் ஆறுமணிநேரம் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையின் இறுதியில், இலங்கை மின்சார சபையின் பொறியியல் ​சங்கத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர் என்று தொழிற்சங்க உறவுகள் மற்றும் சபரகமுவ அபிவிருத்தி அமைச்சின் தகவல் தெரிவிக்கின்றது.   

2018ஆம் ஆண்டுக்கு முன்மொழியப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு யோசனையை நடைமுறைப்படுத்தும் போது, பொறியியல் சேவையை தவிர, இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் சகலரின் சம்பளமும் 13 சதவீதத்தினால் அதிகரிக்கப்படவேண்டும் என்றும் பேச்சுவார்த்தையின் போது வலியுறுத்தப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .