2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மிளகு விலையை ஆராய உப குழு நியமனம்

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 18 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச  சந்தையிலும் உள்ளூர் சந்தையிலும் மிளகு விலை குறைந்தமைக்கான காரணத்தைக் கண்டறிந்து, அமைச்சரவைக்கு அறிக்கை இடுவதற்காக, அமைச்சர்கள் அறுவர்கள் கொண்ட அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.   

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில், அமைச்சர்களான தயா கமகே, அநுர பிரியதர்சன யாப்பா, மலிக் சமரவிக்ரம, ரிஷாட் பதியுதீன், விஜித் விஜயமுனி சொய்சா ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.   

மிளகு விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் வருமானத்தை பாதுகாப்பதற்கு அதன் விலை குறைந்தமைக்கான காரணங்களை கண்டறிந்து அறிக்கையிடுவதற்கே, இந்த உப குழு நியமிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X