2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘முட்டிமோதிக் கொண்டாலும் பேச்சுவார்த்தையை கைவிடோம்’

Editorial   / 2019 மார்ச் 22 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா. நிரோஷ்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான கூட்டணியை அமைப்பது தொடர்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும், பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் இடம்பெற்ற இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தையும் வெற்றியென அறிவித்துள்ள அக்கட்சியினர், இரு தரப்பினரும்  முட்டிமோதிக்கொண்டாலும், கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையைக் கைவிடமாட்டோம் எனவும் அறிவித்துள்ளனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும்​, பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் கூட்டணி அமைப்பது தொடர்பான இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை, எதிர்க்கட்சிக் காரியாலயத்தில், நேற்று (21) இடம்பெற்றது. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையை, ஏப்ரல் மாதம் 10ஆம் திகதியன்று நடத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.   

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி, நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால, அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்‌ஷமன் பியதாச உள்ளிட்டோரும், பொதுஜன பெரமுனவின் சார்பில், அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.  

பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கயழிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்த போதிலும், இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தைகளைக் கைவிட்டிருக்கவில்லை எனவும், ஆகவே இரு கட்சியினரும் முட்டிமோதிக்கொண்டாலும் பேச்சுவார்த்தையைத் தொடர்வோம் என்றார்.  

சுதந்திரக் கட்சிக்கும், பொதுஜன பெரமுனவுக்கு இடையில் பாரிய முரண்பாடுகள் இல்லை எனத் தெரிவித்த அவர், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கத்துக்குமே பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியுமாக இருந்தால், தங்களுக்குள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் சிரமங்கள் இல்லை என்றார்.  

இன்றைய (நேற்றைய) பேச்சுவார்த்தையில் இரு தரப்பினருக்குமிடையில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தல் தொடர்பில் கலந்துரையா டப்பட்டதாகவும், இரு கட்சிகளும் ஒன்றிணைய வேண்டுமென மக்கள் விரும்புவதாகவும் அவர் கூறினார்.  

இந்தப் பேச்சுவார்த்தையும் வெற்றியளிக்கும் வகையில் உள்ளதாகத் தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பிரதான 20 விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு, இதன்போது கலந்துரையாடப்பட்டது என்றார்.  

தேர்தலை இலக்குவைத்து, குறுகிய காலத்தில் அமைக்கப்படும் தற்காலிகமான கூட்டணி இதுவல்ல எனவும், மாகாண, இரு கட்சிகளும் பிரதேச சபைகள் மட்டத்தில் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் இதன்போது இணக்கப்பாடொன்று ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .