2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘முப்படையினர் நாட்டின் ஜனநாயக விழுமியங்களை பேணி பாதுகாக்கின்றனர்’

Editorial   / 2019 ஜூலை 19 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டை பொருத்தவரை பல்வேறு அரசியல் ரீதியான சிக்கல்களை சந்தித்த காலகட்டத்திலும் கூட, எமது முப்படையினரும் காவல் துறையினரும் எந்தவொரு காலகட்டத்திலும், இராணுவ சதிப்புரட்சியையோ, அல்லது ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகளையோ மேற்கொள்ளவில்லை என, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் கடந்த 3 தினங்களாக இடம்பெற்ற, ஜனநாயக தேசிய நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த, நாடாளுமன்ற தலைமைத்துவப் பண்புகள் தொடர்பான கருத்துகளத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்துரைத்துள்ள அவர், எமது நாட்டில் முப்படையினரும் காவல் துறையினரும் ஜனநாயக விழுமியங்களை பேணி பாதுகாப்பதில் அக்கறை காட்டும் தரப்பினராக இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், உலகலாவிய ரீதியில் இளைஞர் யுவதிகள் அரசியலில் அக்கறை காட்டுவதில்லை எனவும் தெரிவித்துள்ள அவர்,  கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இலங்கையில் இடம்பெற்ற ஜனநாயக ரீதியிலான சதி குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இக்காலப்பகுதிலும் கூட முப்படையினரும் காவல்துறையினரும் ஜனநாயகத்தை பேணி காப்பதில் அக்கறையுடன் செயற்பட்டனர் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கருத்துக்களமானது மிகவும் பயனுடையதாக அமைந்திருந்தாக, எம்.பி அரவிந்தகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X