2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘மூன்று சேவைகளும் வரையறுக்கப்பட்ட சேவையாகும்’

Editorial   / 2017 டிசெம்பர் 14 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சின்னசாமி ஷிவானி

நாட்டில் எதிர்காலத்தில் அரச துறைகளில் ஏற்படக்கூடிய சில பிரச்சினைக்ளுக்குத் தீர்வு காணும் வகையில் கல்வி, சுகாதாரம், ரயில்வே ஆகிய துறைகளை வரையறுக்கப்பட்ட சேவையின் கீழ் ​கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர்களில் ஒருவரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (13) இடம்பெற்றபோதே,  அமைச்சர் ராஜத சேனாரத்ன, இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், “ரயில் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது. ரயில் பணியாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண அமைக்கப்பட்ட அமைச்சரவை உப குழு, அவர்களுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வந்ததற்கமைய ரயில்வே ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பைக் கைவிட்டுள்ளனர். வரையறுக்கப்பட்ட சேவையின் கீழ் எதிர்வரும் நாட்களில்  ரயில்வே ஊழியர்கள் முன்வைத்த பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் ஆராயப்படும்.

“நியாமான கோரிக்கையாயின் ஆராய்ந்து அவர்கள் கோரியதற்கமைய  சம்பள அதிகரிப்பு வழங்கப்படும். இதற்கமைய, அடுத்தவாரம் இது தொடர்பான வர்த்தமானிப் பத்திரம் தயாரிக்கப்பட்டு, அங்கிகாரம் பெறப்படவுள்ளது.

“தற்போதைய சூழ்நிலையில் ரயில்வே  ஊழியர்களின் கோரிக்கைக்கமைய சம்பளம் அதிகரிக்கப்படும் பட்சத்தில், தமக்கு சம்பள உயர்வு வேண்டும் என சுகாதாரத் துறை ஊழியர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடலாம். எனவே, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வரையறுக்கப்பட்ட சேவை அவசியமாகின்றது. எனவே, ஒருங்கிணைந்த சேவையின் கீழ், குறித்த மூன்று பிரிவுகளுக்கும் தனித்தனியே சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட விடயங்கள் மேற்கொள்ளப்படும். இதனால் ஒரு துறைக்கு சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டால் ஏனைய துறைக்கு அது பாதிப்பை ஏற்படுத்தாது. அவ்வாறு மேற்கொள்ளப்படும் பட்சத்தில் தற்போது எழுந்துள்ள பிரச்சினை இனி வரும் காலங்களில் ஏற்படாமலிருக்கும். ரயில்வே தொழிற்சங்கமும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது” என அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

மேலும் நேற்றைய அமைச்சரவைச் சந்திப்பில் ஊடகவியலாளர்  எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

கேள்வி: ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்து அவ்வாறே செயற்படுமா?

பதில்: ஆம். நாடாளுன்றில் இது நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கமைய தொடர்ந்தும் செயற்படும்.

கேள்வி: குறித்த பிரச்சினை நீண்டு சென்றமைக்கான காரணம் என்ன? துறைசார்ந்த அமைச்சர் இதற்குத் தீர்வு வழங்காதது ஏன்? இதனை ஜனாதிபதி, பிரதமரிட ம் கொண்டு செல்வதற்கான காரணம் என்ன?

பதில்: தீர்வு வழங்க முடியாத நிலையிலேயே, ஜனாதிபதி மற்றும் பிரதமர் மட்டத்துக்கு  அதனைக் கொண்டு வந்தனர். இதற்கமைய, அமைச்சரவை உப குழு அமைக்கப்பட்டு, தீர்வு காணப்பட்டுள்ளது.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போகிறீர்களா?

பதில்: இல்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை.

ரயில் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பால் ஏற்பட்ட  பாரிய  நட்டத்துக்கு என்ன கூறுகிறீர்கள்?

பதில்: நாட்டில் எவ்வளவு நட்டம் ஏற்படுகிறது. எல்லாவற்றுக்குமாக தற்போது தீர்வு வழங்கப்பட்டுள்ளது.

கேள்வி: அப்படியென்றால் ரயில்வே ஊழியர்களுடன், அரசாங்கம் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதா?

பதில்: அதனாலேயே இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது என்றார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .