2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மூன்று வருடங்கள் கடந்தும் நிரந்தர நியமனம் இல்லை

Editorial   / 2018 ஜூலை 16 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை எனத்  தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 42,000 பணியாளர்களைக் கொண்டிருந்த இந்த திணைக்களத்தில் தற்போது சுமார் 37,000 பேர் பணியாற்றுகின்றனர்.

தற்போதைய தேசிய அரசாங்கம் குறித்த பணியாளர்களுக்கு மூன்று வருடங்களில் நிரந்தர நியமனத்தை வழங்குவதாக கடந்த கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் திகதி உறுறுமொழி அளித்ததோடு,  மூன்று வருட காலத்தை, தகுதிகாண் காலப்பகுதியாகவும் அறிவித்தது.

எனினும் அரசாங்கம் வழங்கிய காலஅவகாசம் நிறைவடைந்து மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.

இந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நிமல் கொஸ்வத்த கடந்த வார இறுதியிலேயே நியமனத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .