2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மே தினத்துக்கு முன்னர் புதிய அமைச்சரவை?

Editorial   / 2018 ஏப்ரல் 22 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சரவை மறுசீரமைப்புத் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுநலவாய அரசத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி, இன்றைய தினம் நாடு திரும்பவுள்ளார். இந்நிலையில் மே முதலாம் திகதிக்கு முன்னதாக புதிய அமைச்சரவை பெயரிடப்படுமெனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்வுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் தமது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து கடந்த 12ஆம் திகதி தற்காலிகமாக நான்கு புதிய அமைச்சர்கள் நியமனம் பெற்றனர்.

எனினும் முழுமையான அமைச்சரவை மறுசீரமைப்பு, தமிழ் சிங்கள புத்தாண்டுக்குப் பின்னரே இடம்பெறுமென ஜனாதிபதி செயலம் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .