2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மேன்முறையீட்டு மனுத் தள்ளுபடி: பாரதிபுரம் மக்கள் திண்டாட்டம்

Kogilavani   / 2018 ஜூலை 08 , பி.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்த​லாவை - கொட்டியாகலை, பாரதிபுரத்தில் காணி விவகாரம் தொடர்பில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனு, தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, பாரதி புரத்தைச் சேர்ந்த 40 குடும்பங்களைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்பு, கடந்த வெள்ளிக்கிழமை( 06) வழங்கப்பட்டது.

நீதியரசர்களான ஜனக்க டி சில்வா மற்றும் அசேல வேங்கப்புலி ஆகியோரினால் மேற்படி தீர்ப்பு வழக்கப்பட்டது.
மேன்முறையீட்டு மனு, தள்ளுபடி செய்யப்பட்டமையால் தாம் எந்தநேரத்திலிருந்தும் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படலாம் என, பாரதி புரத்தைச் சேர்ந்த 4 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் பெரும் திண்டாட்டத்துடன் இருக்கின்றனர்.

பாரதிபுரத்தில் சுமார் 40 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் வாழ்க்கின்றனர். இந்நிலையில் அக்காணி தமக்கு சொந்தமானதென தெரவித்து பொகவந்தலாவ பிளான்டேசன் கம்பனியினால், ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு, நிர்வாகத்துக்கு சார்பாக இருந்தமையால், அங்கிருந்த இரண்டொரு குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் வீடுகள், நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய பொறுப்பேற்கப்பட்டு, பொகவந்தலாவ பிளான்டேசன் கம்பனியின் நிர்வாகத்தின் கீழுள்ள கொட்டியாகலை ​தோட்டத்​தில் வசித்த இரண்டு குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், அந்த தீர்ப்புகளை எதிர்த்து, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதிலொரு வழக்கின் தீர்ப்பு, ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில், ராமையா நகுலேஸ்வரன் என்பவர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவே, நீதிமன்றத்தால் கடந்த வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.

பாரதிபுரத்தில் வீடுகளை அமைப்பதற்கு, முன்னாள் அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனின் காலத்தில், அதாவது 1999ஆம் ஆண்​டில் அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டு, காணியுறுதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

அந்தக் காணியுறுதிகளைப் பெற்றிருந்த பெருந்தோட்ட மக்கள், அதே தோட்டத்தைச் சேர்ந்த சிலருக்கும் வெளியார் சிலருக்கும், அந்தக் காணியுறுதிகளை ​விற்றுவிட்டனர்.

இந்நிலையில், அந்த இடம் தங்களுக்குச் சொந்தமானதெனத் தெரிவித்து, பொகவந்தலாவ பிளான்டேசன் கம்பனி வழக்குத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வழக்கின் தீர்ப்பு, தோட்ட நிர்வாகத்துக்கு சார்பாக அமைந்துள்ளமையால், தாங்கள் எந்தநேரத்திலும் பாரதிபுரத்திலிருந்து வெளியேற்றப்படலாமென, பாரதி புரத்தைச் சேர்ந்த மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .