2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மொஹான் பீரிஸ் உள்ளிட்ட மூவருக்கு எதிராக வழக்கு

Editorial   / 2018 ஜனவரி 19 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் சட்டமா அதிபரும் முன்னாள் பிரதம நீதியரசருமான மொஹான் பீரிஸ் மற்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசருமான ஏ.எச்.எம்.டீ. நாவஸ் மற்றும் இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தின் (லெகோ) முன்னாள் செயலாளர் எம்.எம்.சீ. பெர்டினன்டஸ் ஆகியோருக்கு எதிராக  வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் இந்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லால் ரணசிங்க, மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள மூவரையும் எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

மொஹான் பீரிஸ், சட்டமா அதிபராக கடமையாற்றிய  காலத்தில், லெகோ நிறுவனத்தின் காணி மற்றும் சொத்துக்களை கொள்வனவு செய்த விடயத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மற்றும் சீர்கேடுகள் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய அதிகாரிகளுக்கு எதிராக, குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்வதை தடுக்கும் வகையில்  தவறான அறிக்கை ஒன்றை வழங்கியமைக்கு எதிராகவே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .