2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’மோசடி குறித்து பேசியர்கள் ஊழலில் ஈடுபட்டனர்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 17 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊழல், மோசடிகள் குறித்து பேசியவர்கள், மத்திய வங்கி ஊழலில் ஈடுபட்டனர் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

இந்த நாட்டில் மூவின மக்களும் எதிர்பார்க்கும் சகல தகுதிகளும் கொண்ட ஜனாதிபதி வேட்பாளரையே எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை களமிறக்கவுள்ளோம் என்றும் பிரதான கட்சிகளின் பொய்களையும் ஊழல் குற்றங்களை நிராகரிக்கும் சகல மக்களும் எம்முடன் இணைந்து புதிய பயணத்தை ஆரம்பிக்க வருமாறும் அழைப்பு விடுக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.

ராஜபக்‌ஷவை வீழ்த்தி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், மீண்டும் ராஜபக்‌ஷவை பலப்படுத்தும் வேலைதிட்டங்களையே முன்னெடுத்தது என்றும் இந்த ஆட்சியில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றது என்றும் ஊழல் மோசடிகள் குறித்து பேசியவர்கள் மத்திய வங்கி ஊழலில் ஈடுபட்டனர் என்றும் கூறினார்.

ஆகவே, 2015ஆம் ஆண்டும் ஊழல் ஆட்சியே முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், இந்த ஊழல் ஆட்சிகள் இனியும் இடம்பெறக் கூடாது என்றும்மாறி மாறி இவர்களின் ஊழலை முன்னெடுக்க இடமளிக்க முடியாது என்று மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .