2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யாழ்ப்பாணத்தில் புலிகள் அட்டகாசம் புரியவில்லை

Kamal   / 2018 ஜூன் 20 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்பாணம் - மல்லாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தை முறியடிக்க முற்பட்ட பொலிஸாரின் செயற்பாடு நியாயமானதெனத் தெரிவித்த பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவம், சட்டம் மற்றும் ஒழுங்குகள் பிரதியமைச்சர் நளின் பண்டார, “யாழ்ப்பாணத்தில் புலிகளின் அட்டகாசம் இடம்பெறவில்லை” என்றும் குறிப்பிட்டார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில், நேற்று ( 19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், யாழ்ப்பாணம் - மல்லாகத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தின் போது, பொலிஸார் தலையீடு செய்தவிதம் குறித்து விமர்சிக்கப்படுகின்றது என்றும் பொலிஸார் இருவர், சுன்னாகத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போதே, மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற மேற்படி வாள்வெட்டுச் சம்பவத்தைத் தடுப்பதற்கு முற்பட்டுள்ளனர் என்றும் கூறினார். 
இதன்போது, வாள்வெட்டுச் சம்பவத்தை முறியடிப்பது மாத்திரமே பொலிஸாரின் நோக்கமாக இருந்துள்ளதெனக் குறிப்பிட்ட அவர், இதனை அவ்விடத்துக்கு வந்த நீதவானும் உறுதிபடுத்தியுள்ளார் என்றும் மக்களைக் கோபமடையச் செய்யாத விதத்தில், நீதவான் உண்மையைக் கூறியுள்ளார் என்றும், இவ்வாறான சம்பவங்களை, புலிகளின் அட்டகாசம் என்று கூறுவது உண்மைக்குப் புறம்பானதென்றும் குறிப்பிட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .