2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

யோஷிதவின் பாட்டியிடம் வாக்குமூலம் பெற அனுமதி

Editorial   / 2017 செப்டெம்பர் 22 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெஹிவளை, மிஹிந்து மாவத்தை பகுதியிலுள்ள 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொகுசு பங்களா தொடர்பில், பொலிஸ் நிதிக்குற்றப்  புலனாய்வுப் அப்பிரிவுக்கு (FCID)  சென்று வாக்குமூலமளிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி பொரஸ்டுக்கு, கொழும்பு பிரதான நீதவான், இன்று (22) கட்டளையிட்டுள்ளார்.

யோஷித ராஜபக்ஷ, மேற்குறிப்பிட்ட பங்களாவை தனது பாட்டியின் பெயரில் வாங்கினார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பில், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் தாக்கல் செய்யப்பட்டிந்த வழக்கு, பிரதான நீதவான் லால் ரணசிங்க  முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்குடன் தொடர்புடைய விசாரணை அறிக்கைகள், சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும் அவரது ஆலோனையை இன்றும் பெற்றுக்கொள்ளவில்லை என்று அறிவிக்கப்பட்டது.

அத்துடன், டெய்சி பொரஸ்டிடமிருந்து வாக்குமூலமொன்றை  பெற அனுமதிக்குமாறு, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோரியதையடுத்தே,  நீதவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .