2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

ரஞ்சனுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 21 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்றத்தை அவமதித்ததாகத் தெரிவித்து, முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு, நவம்பர் மாதம் 6ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனு இன்று (21) சிசிர த ஆப்ரு, விஜித் மலல்கொட மற்றும் பிரித்தி பத்மன் சூரசேன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கின் பிரதிவாதியாக பெயரிட்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்காக ஆஜரான சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இன்று நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதால் தனது வாதங்களை முன்வைப்பதற்காக வேறொரு திகதியை கோரியிருந்தமைக்கு அமைய, நவம்பர் நவம்பர் 6ஆம் திகதி எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .