2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘ரணிலை பதவி நீக்க மஹிந்த விரும்பவில்லை’

Editorial   / 2018 மார்ச் 23 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.கமல்

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ‍கொண்டுவந்தவர்களின் அடுத்த இலக்கு ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் ஆவர்” எனத் தெரிவித்த பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, “பிரதமர் பதவியிலிருந்து ரணில் நீக்கப்படுவதை மஹிந்த ராஜபக்ஷ விரும்பவில்லை” என்றார்.

பெற்றோலிய வளத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில், நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்கொண்டு, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து கருத்து வெளியிடுகின்ற பலர் அடுத்த தேர்தலை இலக்கு வைத்து தம்மைப் பிரபலப்படுத்திக்கொள்ளும் வகையிலேயே செயல்படுகின்றனர்.

 “மக்கள் ஆணையில்லாதவர்கள் தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கத்துடனேயே, நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்துள்ளனர். இவ்வாறாக ஆட்சியை மாற்றிவிட்டு அடுத்த தேர்தலிலும் தோல்வியடைந்து தேசியப் பட்டியலின் ஊடாக உள்நுழைய எதிர்பார்த்துள்ளவர்கள் தான் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை அவசியப்படுகின்றது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திடாமல் இருப்பது ரணில் விக்கிரமசிங்கவை, பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதில் அவருக்கு உடன்பாடு இல்லை என்பதையே வெளிப்படுத்துகின்றது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .