2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’ரணில் பணையக் கைதி’

Editorial   / 2019 ஜனவரி 17 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.கமல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணக்கத்துடனேயே அமைச்சரவை தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றதெனத் தெரிவிக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அக்கூட்டமைப்பின் பணையக் கைதியாகிவிட்டார் என்றும் தெரிவித்தார்.

கொழும்பு, பிடகோட்டேயில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலத்தில் நேற்று (16) ந​டைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் இருவேறு பிரதேசங்களில் இடம்பெற்ற இரண்டு நிகழ்வுகளில் கலந்துகொண்ட தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும், கூட்டமைப்பு எம்.பி எம்.ஏ.சுமந்திரனும், கூட்டமைப்பின் இணக்கத்துடனேயே அமைச்சரவை தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றதென தெரிவித்துள்ளனர் ​என்று குறிப்பிட்ட அவர்,  தற்போதைய அரசாங்கத்தை, கூட்டமைப்பு பணையக் கைதியாக்கிகொண்டுள்ளது எனவும் சாடினார்.

அத்துடன், கடந்த காலங்களில், வடக்கு அபிவிருத்தி அமைச்சு டி.எம். சுவாமிநாதனுக்கு வழங்கப்பட்டிருந்த போதும், அந்த அமைச்சின் செயற்பாடுகளைக் கூட்டமைப்பினரே தீர்மானித்தனர் என்றும் குறிப்பிட்டார்.  

கடந்த நாள்களில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலைகளின் போது தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாத்ததென தெரிவித்த அவர், கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்றும் நோக்கத்திலேயே வடக்கு அபிவிருத்தி அமைச்சு பதவியை ரணில் விக்கிரமசிங்க தனதாக்கிக் கொண்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையிலேயே ​புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டது. இதனால், ஏற்படப்போகும் பாதகமான விளைவுகளை தடுக்க முடியாதென்றும் தெரிவித்த அவர், அதனூடாக வடக்கு, கி​ழக்கை இணைக்கும் முயற்சிகளே முன்னெடுக்கப்படும் என்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .