2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ரயில்களில் யாசகர்களுக்கு தடை; ரயில் நிலையங்களிலிருந்தும் அகற்ற நடவடிக்கை

Editorial   / 2018 ஜூன் 18 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பா.நிரோஸ்

நாடு முழுவதிலும் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் யாசகர்களுக்கு எதிர்வரும ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து தடைவிதிக்கப்படுமென தெரிவித்துள்ள ரயில்வே திணைக்களம், ரயில் நிலையங்களில் தங்கியிருக்கும் யாசகர்கள் ரயில்வே காவலர்களால் அகற்றப்படுவார்கள். இதற்கு பொலிஸாரின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படும் எனவும்  தெரிவித்துள்ளது.

ரயில் நிலையங்களில் அதிகரித்து வரும் யாசகர்களினால், பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் தொடர்பில் தமிழ்மிரருக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே ரயில் திணைக்களத்தின் கண்காணிப்பாளர் விஜய சமரசிங்க மேற்கண்டவாறு கருத்துரைத்தார்.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பஸ் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்துக் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில் கட்டணங்கள் சுமார் 7 வருடங்களாக அதிகரிக்கப்படாமல் உள்ளது. இதனால் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் தற்போது ரயில் போக்குவரத்தைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர் எனவும் அவர் சுட்டிகட்டினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்த கருத்துகள் வருமாறு,

“பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற அதேவேளை யாசகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ரயில் நிலையங்களில் யாசகம் கேட்பவர்கள் பிட்பொக்கட் திருடர்களுக்கு உதவுவது உள்ளிட்ட பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

“இதனைத் தொடர்ந்து எதிர்வரும் ஜூலை மாதல் முதலாம் திகதியிலிருந்து ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் யாசகம் கேட்பவர்கள், பொலிஸாரின் உதவியுடன் ரயில் பாதுகாவலர்களால் அகற்றப்படுவார்கள்.இதனை மீறி செயற்படும் யாசகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் இவர் இதன்போது தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .