2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ராஜிதவின் பட்டியலுக்கு கத்தரிபோட்ட மைத்திரி

Editorial   / 2018 மே 21 , மு.ப. 11:58 - 1     - {{hitsCtrl.values.hits}}

உலக சுகாதார ஸ்தாபனத்தின் 70ஆவது மாநாட்டில் பங்கேற்பதற்காக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன், மாநாட்டில் பங்கேற்பதற்கான பிரதிநிதிகள் பட்டியலின் எண்ணிக்கை, 20இலிருந்து 14ஆக குறைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி, மைத்திரிபால சிறிசேன இதுத்தொடர்பில் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட பட்டியலில் 6 பேரின் பெயர்களை ஜனாதிபதி நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம் சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் இவ்வாறு பெரிய குழுவொன்று இலங்கை சார்பில் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை என, ஜனாதிபதி தெரிவித்துள்ளதாகவும் அரசியல் வட்டராத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுகாதார பிரிவின் பிரதிப் பணிப்பாளர்களும் இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பிரதி சுகாதார அமைச்சரும் உறுதிப்படுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 1

  • S.P.Jesuthasan Monday, 21 May 2018 11:04 AM

    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. ஆற்றில்போட்டாலும் அளந்து போடனும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .