2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ராஜீவ் கொலை வழக்கு ; மறுவிசாரணை தொடர்பில் ஜன.24 தெரியும்

Editorial   / 2017 டிசெம்பர் 13 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை, வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்வது தற்போது சாத்தியம் இல்லை என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.  

பேரறிவாளனை விடுதலை செய்யக் கூடாது என நேற்றைய (12) விசாரணையில் சிபிஐ கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.  

ராஜீவ் காந்தி படு​கொலை வழக்கில் 25 ஆண்டுகாலம் சிறையில் இருந்து வருகிறார் பேரறிவாளன். தம்மை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.  

இம்மனுவை உச்சநீதிமன்றம் நேற்று விசாரித்தது. இன்றைய விசாரணையின் போது பேரறிவாளனை விடுதலை செய்ய சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.  

மேலும் பேரறிவாளனின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததில் தவறு நடந்ததாக விசாரணை அதிகாரி கூறியுள்ளார். இதனடிப்படையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கை மறுவிசாரணை செய்யலாமா என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.  

இது தொடர்பாக மத்திய அரசாங்கம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜனவரி 24 ஆம் திகதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .