2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ரிட் மனுக்கள் மீது இன்று விசாரணை

Editorial   / 2017 நவம்பர் 22 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லைகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தீர்மானித்து வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட்- மனுக்கள், இன்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.   

நவம்பர் மாதம் 2ஆம் திகதியன்று வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானிக்கு எதிராகத் தாக்கல்

செய்யப்பட்டுள்ள ஆறு ரிட்- மனுக்களே, இவ்வாறு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. அந்த வர்த்தமானி அறிவித்தலை அதிகாரமற்றதாகக் கட்டளை பிறப்பிக்குமாறு கோரி, கொழும்பு, கண்டி, ஹாலி எல, மாத்தறை மற்றும் எம்பிலிபிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் அறுவரால், நவம்பர் மாதம் 15ஆம் திகதி, இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.   

மனுக்களை, நீதியரசர்களான எல்.டி.பீ. தெஹிதெனிய, குமுதினி விக்ரமசிங்ஹ மற்றும் சிறிலால் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் கடந்த 16ஆம் திகதியன்று, பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே, நீதியரசர்கள் குழாம் மனுக்களை, 22 ஆம்திகதி (இன்று) விசாரணைக்கு எடுத்து கொள்வதற்கு தீர்மானித்தது. ரிட்- மனுக்களில், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.   

குறித்த உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணய விடயங்களுக்காக நியமிக்கப்பட்ட உப குழுவின் பரிந்துரைக்கு அப்பால் அமைச்சரால் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.   

உப-குழுவின் பரிந்துரைகளை மீறி, வர்த்தமானியை வெளியிடுவதற்கு அமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்றும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.   

இதேவேளை, இந்த மனுக்களுக்கு, ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி ஆகியன இடையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .