2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ரூ.251 மில்லியனை விழுங்கிய யானை

Editorial   / 2017 ஒக்டோபர் 23 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலதா மாளிகைக்கு, மியன்மாரிலிருந்து யானையொன்றை கொண்டு வருவதற்காக 251 மில்லியன் ரூபாய் மோசடி இடம்பெற்றுள்ளதென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. திறந்த சந்தையில் 10 முதல் 15 மில்லியன் ரூபாய்க்குப் பெற்றுக்கொள்ள வேண்டியை யானைக்கு, 261 மில்லியன் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. 

யானைகளைப் பதிவு செய்தல் மற்றும் பெற்றுக் கொள்ளப்படுவது தொடர்பில் இடம்பெற்றதெனக் கூறப்படும் மோசடிகளை விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்டிருந்த உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் நிமல் எட்வர்ட் திசாநாயக்க பங்கெடுத்த தனிநபர் ஆணைக்குழு, நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவுக்கு, இது குறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.   

இந்த அறிக்கையின் பிரகாரம், 2007ஆம் ஆண்டு, யானையைப் பெற்றுக்கொண்டமைக்காக குறித்த பணம் சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதெனத் தெரியவந்துள்ளது. இந்தப் பணப்பரிமாற்றலுடன் தொடர்புடைய அதிகாரி தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறு, அந்த ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. 

இதேவேளை, 2011 முதல் 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் காடுகளிலிருந்து சட்டவிரோதமான முறையில் யானைகளைப் பிடித்து, வர்த்தகர்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அரசியல் சார்ந்தோருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .