2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

லண்டனில் புத்தாண்டுக் கொண்டாட்டம்; ஜனாதிபதி பங்கேற்பு

Editorial   / 2018 ஏப்ரல் 22 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

லண்டன் கிங்ஸ்பெரி ஸ்ரீ சத்தாதிஸ்ஸ பௌத்த மத்திய நிலையத்தின் அக்கமகா பண்டித கலயாயே பியதஸ்ஸி நாயக்க தேரரின் தலைமையில் நேற்று (21) இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில்,  பிரதம அதிதியாக ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.

லண்டன் ஹெரோ லெஷர் நிலையத்தில் (Harrow Leisure Centre) நேற்று இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிரித்தானியாவில் வசிக்கும் சுமார் 4,000 இலங்கையர்கள் பங்கேற்றனர்.

நிகழ்விற்கு வருகைதந்த ஜனாதிபதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், இலங்கையின் சுதேச விளையாட்டுக்கள், கலாசார நிகழ்வுகள் இந்தக் கொண்டாட்டத்தில் இடம்பிடித்திருந்தன.

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, பிரித்தானியாவில் வசிக்கும் சகல இலங்கையர்களுக்கும் மலர்ந்துள்ள சிங்கள, தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், நாட்டின் சட்டதிட்டங்களை விட மக்களின் பண்பாடும் பாரம்பரியமும் பலமிக்கதாகும் என்பதுடன் இலங்கையின் கலாசார விழுமியங்களை மதித்து புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமைக்கு பாராட்டு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .