2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

லயன் வீடமைப்பை மாற்ற திட்டம்

S. Shivany   / 2021 ஜனவரி 26 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டப் பகுதிகளில் தற்போதுள்ள லயன் அறைகளை அகற்றி, குறித்த இடத்திலேயே புதிய வீடுகளை அமைக்க அரசாங்க கவனம் செலுத்தியுள்ளது.

இதனால், லயன் வீடுகள் அமைந்துள்ள இடத்தில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வரை, வேறு இடத்தில் தற்காலிகமாக வசிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

தோட்ட தொழிலாளர்களுக்கு லயன் அறைகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தோட்ட வீடமைப்பு முறைமை 2000 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை பல்வேறு பொறிமுறையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

தற்போது அரசாங்கத்தின் அனுசரணையுடன் 7 பேர்ச்சர்ஸ் காணி உறுதியுடன் கூடிய 550 சதுர அடிகளைக் கொண்ட வீடமைப்பு மற்றும் இந்திய அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புக்களுடன், 550 சதுர அடிகளைக் கொண்ட 02 வீட்டுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.  

இம்முன்மொழிவுத் திட்ட முறைமையின் கீழ் வீடுகளை வழங்கும் போது பின்பற்றுகின்ற நடைமுறைகள் மாறுபடுகின்றமையால் ஏற்றத்தாழ்வுகள் தோன்றியுள்ளதால், தோட்ட மக்களுக்கு வீடுகளை வழங்கும் போது பொதுவான ஒரு பொறிமுறையைப் பின்பற்றவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .