2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

லெப்டினன் கமாண்டர் தயானந்தவுக்கு விளக்கமறியல்

Editorial   / 2018 ஒக்டோபர் 24 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் இன்று காலை செய்யப்பட்ட லெப்டினன் கமாண்டர் சம்பத் தயானந்தவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வைத்து இரண்டு நபர்களை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கடற்படையின் புலனாய்வு பிரிவின் லெப்டினன் கமாண்டர் சம்பத் தயானந்தவை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் சேகர  சமரதிவாகர இன்று உத்தரவிட்டுள்ளார்.

நகர சபை ஊழியர்களான வடிவேலு லோகநாதன், ரத்னசாமி பரமநாதன் ஆகிய இருவரும் 2009ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட குற்றச்சாட்டு லெப்டினன் கமாண்டர் மீது சுமத்தப்பட்டிருந்ததுடன்,  அந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலமளிக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வருகைத் தருமாறு இவர் அழைக்கப்பட்டிருந்த நிலையில், இவர் வாக்குமூலமளிக்க வருகைத் தந்த போதே குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில், முன்னதாக கைதுசெய்யப்பட்டிருந்த மற்றுமொரு சந்தேகநபரான கடற்படையின் லெப்டினன் கமாண்டர் அனில் மாபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .