2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சந்தேகநபர்கள் கொலை; அறிக்கை கோரும் ஆணைக்குழு

R.Maheshwary   / 2021 மே 18 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பாதாளக்குழு உறுப்பினர்களான ‘கொஸ்​கொட தாரகா’ மற்றும் ‘ஊரு ஜுவா’ ஆகியோரின் மரணம் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் முழுமையான அறிக்கையை வழங்குமாறு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதுடன், பொலிஸாரின் பொறுப்பின் கீழுள்ள சந்தேகநபர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது பொலிஸ் திணைக்களத்தின் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளது.

இது பொலிஸ் திணைக்களத்தின் கட்டளைகள் மற்றும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது என அவ்அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் மிக அண்மையில் இவ்வாறான இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளமை நாட்டின் சட்ட ஆட்சி குறித்து, பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, இந்த சம்பவங்கள் ​தொடர்பில், கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காகவே, குறித்த விசாரணைகளின் முழுமையான அறிக்கையை கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .