2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அஜித் ரோஹண விலகுவதாக அறிவிப்பு

R.Maheshwary   / 2020 டிசெம்பர் 01 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த குழுவிலிருந்து, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதியமைச்சரால் நியமிக்கப்பட்ட குறித்த குழுவிலிருந்து தன்னை நீக்கி விட்டு, வேறொருவரை நியமிக்குமாறு, நீதியமைச்சருக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அமைச்சரின் ஆலோசனைக்கமைய அமைச்சின் செயலாளரால், ஓய்வுப்பெற்ற நீதியரசர்  குசலா விஜேவர்தன தலைமையில் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன், இதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹணவும் இணைக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை பொலிஸ் ஊடகப் பேச்சாளரை இந்த விசாரணைக்குழுவில் நியமிப்பதன் மூலம் அவர், விசாரணை தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்குவார் என இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர்,
நாம் நம்புகின்றோம் அவர் சொல்ல வேண்டியதை செய்ய வேண்டியதை கட்டுப்பாடுகளுடன் செய்வார். அவர் பொலிஸ் இரகசிய தகவல்களை இதுவரை ஊடகங்களுக்கு அறிவித்ததாக எந்த குற்றச்சாட்டுகளும் பதிவாகவில்லை. 

அவர் மீது நம்பிக்கையிருப்பதாலேயே அவரை இப்பதவிக்கு நியமித்துள்ளனர் என்றார்.
 அத்துடன் அவர் பொலிஸ் திணைக்களத்தின் சட்டப்பிரிவுகளுக்கு பொறுப்பான சட்டத்தரணி என்றும் தெரிவித்தார்.

எனவே ஒருவரைப் பற்றி தெரியாமல் அவர் மீதான நம்பிக்கைத் தொடர்பில் கருத்து வெளியிடுவது தவறு என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .