2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வரிக்குறைப்பு அறிவிப்பு

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 18 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இணைய சேவைக்காக, இதுவரையிலும் விதிக்கப்பட்ட, தொலைத்தொடர்பு வரி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் நீக்கப்படும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.   

இதேவேளை, 150 சீசீ -க்குக் குறைவான வலுகொண்ட மோட்டார் சைக்கிள்கள் மீதான வரி, 90 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை, இன்று (10) நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.  

அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,   

இணைய சேவைக்கான இந்த வரி நீக்கமானது முற்கொடுப்பனவு இணைய சேவைக்கே அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் 25 சதவீதமான பிரதிபலனை மக்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.  

இதேவேளை, விஷேடமாக ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற மோட்டார் சைக்கிள்களுக்கான விலைகளே குறைக்கப்பட்டுள்ளன.  

இதுதவிர, சிறிய ரக லொறி மற்றும் சிங்கள் கெப் ரக வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியில் 3 இலட்சம் ரூபாய் குறைக்கப்படுவதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .