2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வளங்களை அழிப்பதால் அபிவிருத்தி தடைப்படும்

Editorial   / 2019 மார்ச் 25 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுற்றுலாத்துறையின் முக்கியத்துவத்தை அறியாமல் மக்கள் இயற்கை வளங்களை அழிக்கின்றனர் என தெரிவிக்கும் அமைச்சர் சாகல ரத்நாயக்க, அதனால் அபிவிருத்தி செயற்பாடுகள் தடைப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மிரிஸ்ஸ பகுதியில்  பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,

சுற்றுலாத்துறையின் மூலம் ஈட்டப்படும் வருமானம் பல தரப்புக்கு பகிரப்படுகின்றதெனவும், நாட்டில் காணப்படும் வழங்களை பாதுகாப்பதால் மாத்திரமே சுற்றுலாத்துறையை விருத்தி செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, மக்களும் அரசாங்கமும் வளங்களை பாதுகாக்க வேண்டும் எனவும், போதைப்பொருட்களால் இப்பகுதிகளை முழுமையாக அழித்துவிடக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான, செயற்பாடுகளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதுடன், சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றை உருவாக்குவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .