2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வவுனியாவில் 35 அகதிகள்

Editorial   / 2019 மே 18 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் அரசியல் தலைமைகள், தமிழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி, இலங்கையில் தஞ்சம் கோரிய பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு அகதிகள் 35 பேர், நேற்று (17) இரவு, வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையமாகச் செயற்படும் கூட்டுறவுக் கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் குறித்த விடயம் தொடர்பாக செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், வவுனியா மாவட்ட செயலகத்தில் குறிப்பட்ட சில அதிகாரிகளுக்கு, சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினங்களில், கடமைக்கு சமூகமளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கையில் தஞ்சம் கோரிய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 1,600 அகதிகளை, அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தின் பின்னர் தங்க வைப்பத்தில் பாரிய சிக்கல் ஏற்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .