2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘வாக்குறுதிகளை நிறைவேற்றிய பின்னரே தேர்தலில் குதிப்போம்’

Editorial   / 2017 ஓகஸ்ட் 21 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாம் கடந்த காலத்தில் மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளில் எஞ்சியவைகளையும் பரிபூரணமாக நிறைவேற்றிய பின்னரே அடுத்த தேர்தலில் களமிறங்குவோம் என, காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். 

சிறிகொத்தவில், நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதெ அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 

“அரசாங்கத்தின் இரு வருட இணைந்த ஆட்சியில் மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளில் அதிகமானவற்றை நிறைவேற்றி மக்களின் நம்பிக்கையையும், சர்வதேசத்தின் அபிமானத்தையும் வென்றெடுத்துள்ளோம். 

“பண்பாடு மற்றும் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய நாடாகவே இலங்கை அடுத்த பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும்  

கடமை என்ற ரீதியில் அரசாங்கத்தின் நிகழ்ச்சி பட்டியலில் உள்ள வேலைத்திட்டங்கள் அனைத்தும் அடுத்த 2 - 3 வருடங்களில் செய்துமுடித்துவிடப்படும். 

“நாட்டை பொறுப்பேற்று 2 வருடங்கள் கடந்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் அந்த 2 வருடங்களையும் மீண்டும் திரும் பார்க்கும்போது, மகிழ்ச்சியடைந்த பல சந்தர்ப்பங்களை நினைவுக்கு கொண்டு வர முடிகின்றது” என்றார். 

“அரசாங்கத்தின் வருவாய் அதிகரித்து செலவு குறைவடைந்துள்ளது. விசேடமாக, எமது நாட்டுக்குள் முதலீட்டளர்களின் எண்ணிக்கை எந்த கடந்த இரண்டு ஆண்டுகளையும் விடவும் அதிகரித்துள்ளது. நாட்டில் வௌ்ளை யானைகளின் திட்டங்களை தான் இவ்வளவு காலமும் காணக் கூடியதாக இருந்தது. அது தற்போது இல்லாமல் போய்விட்டது. 

“இன்று நாம் நல்லதொரு நிமையை உருவாக்கியுள்ளோம். அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. நாம் குறைக்கப்பட்ட பொருட்களின் விலைகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கூட்டப்பட்டிருந்தன. அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக நாடு முன்னேற்றப் பாதையில் நடைபோடத் தொடங்கியுள்ளது. 

“அத்துடன் தற்போதைய அரசாங்கம் பொதுமக்களின் வரிப்பணத்தை வீணாக்கும் வகையில் நட்டமடையக் கூடிய எந்தவொரு செயற்றிட்டத்தையும் முன்னெடுப்பதில்லை. கடந்த அரங்ககம் அவ்வாறான செயற்றிட்டங்களை ஆரம்பித்து பொதுமக்களின் வரிப்பணத்தை பெருமளவில் வீணாக்கியிருந்தது. 

நாட்டை பண்பாடு மற்றும் நவீனமாற்றங்களில் முன்னேற்றமடைந்த நாடாக அபிவிருத்தி செய்து அவ்வாறான நவீன தொழில்நுட்ப ரீதியான வழிமுறைகளின் ஊடாகவே அடுத்த தேர்தலின் ​போது நாட்டு மக்கள் வாக்களிப்பதற்கான வசதிகள் செய்யப்படும்” எனவும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .