2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘விண்ணப்பங்கள் கிடைக்கவில்லை ‘

Editorial   / 2019 பெப்ரவரி 18 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அலுகோசு பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு, விளம்பரம் செய்யப்பட்டிருந்த போதிலும், இருவரையிலும் ஒரு விண்ணப்பமேனும் கிடைக்கவில்லையென சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

விண்ணப்பங்கள், கடந்த 11ஆம் திகதி முதல் கோரப்பட்டிருந்தன. எதிர்வரும் 25 ஆம் திகதி, விண்ணப்பங்களை ஏற்கும் இறுதித் திகதியாகுமென அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்ததெனத் தெரிவித்த சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய, கடந்த ஒருவாரகாலத்துக்குள் எவ்விதமான விண்ணப்பங்களும் கிடைக்கவில்லை என்றார்.

அலுக்கோசு பதவிக்காக, விண்ணப்பங்களை அனுப்புபவர். ஆணாகவும் 18-45 ​வயதுக்கிடைப்பட்டவராகவும் இருக்கவேண்டுமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. அத்துடன்,  கல்விப் பொதுத்தராதர சாதாரணத் தரப் பரீட்சையில் 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அடிக்கொருதடவை பிரஸ்தாபித்து வருகின்றார். இந்நிலையிலேயே, அலுகோசு பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டன.

இதேவேளை, மரணதண்டனையை இலங்கையில் மீண்டும் அமுல்படுத்துவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு, கத்தோலிக்க ஆயர் பேரவை கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்து, அறிக்கையொன்றையும் அண்மையில் வெளியிட்டிருந்தது.  

இந்நிலையில், மரண தண்டனையை, இலங்கையில் மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல்கள் தொடர்பில் தாமும் அவதானத்தைச் செலுத்தியிருந்ததாகத் தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், மரண தண்டனையை அமுல்படுத்தினால், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இழக்கவேண்டிய நிலைமையேற்படுமென எச்சரிக்கை செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X