2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Editorial   / 2018 பெப்ரவரி 23 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவுக்கு எதிராக தாக்கல் ​செய்யப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, கொழும்பு வணிக மேல்நீதிமன்ற நீதிபதி மஹிந்த சமயவர்தன முன்னிலையில் நேற்று (22) விசாரணைக்கு  எடுத்து கொள்ளப்பட்டது. இதன்போதே, ஒத்திவைக்கப்பட்டது.

புலமைச் சொத்து சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுக்கு இழப்பீடு வழங்குமாறு தெரிவித்து, விமல் வீரவங்சவுக்கு எதிராக,  ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவினால், இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

விமல் வீரவன்சவினால், எழுதி வெளியிடப்பட்ட “நெத்த வெனுவெட எத்த” எனும் புத்தகம், தன்னுடைய கருத்தை ​அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. அவர், ஜே.வி.பியின் உறுப்பினராக இருந்த வேளையில், ஜே.வி.பியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டங்களில் தன்னால் முன்வைக்கப்பட்ட கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை அடிப்படையாக வைத்தே, இந்தப் புத்தகம் எழுதப்பட்டதாக, அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆகையால், புலமைச் சொத்து சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில், அவரிடமிருந்து 50 மில்லிய் ரூபாவை பெற்றுத்தருமாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X