2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வில்பத்து விடயத்தில் ஜனாதிபதி தலையிட வேண்டும்

Editorial   / 2019 மார்ச் 21 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வில்பத்து வனத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பாரியளவிலான காடழிப்பு செயற்பாடு குறித்து, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்த வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், தொடர்ந்து இக் காடழிப்பு செயற்பாடு இடம்பெற்று பாரிய அழிவு இடம்பெறுவதற்கு முன்னர், ஜனாதிபதி இந்த விடயத்தில் தலையிட வேண்டுமென, அவர் தனது டிவிட்டர் பதிவில் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

இப் பிரச்சினை சூழல் பிரச்சினையாக மாத்திரமன்றி, ஒரு சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதால், அரசாங்கம் இந்த விடயத்தில் பொறுப்புடன் செயல்பட வேண்டுமென, நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .