2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வீட்டுத்தோட்டத்தில் கிளைமோர் குண்டு

Editorial   / 2019 ஏப்ரல் 18 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை-மன்னம்பிட்டி பகுதியிலுள்ள கிராமம் ஒன்றின் வீட்டுத் தோட்டத்திலிருந்து, புதைக்கப்ட்டிருந்த 4 கிலோ கிராம் நிறையுடைய கிளைமோர் குண்டொன்று இன்று (18) காலை இனங்காணப்பட்டுள்ளது.

மன்னம்பிட்டி, இலக்கம் 117 என்ற முகவரியில் வசத்துவரும், இந்துராஜா கோபால் என்பவரது வீட்டுத்தோட்டத்திலிருந்தே, குறித்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குண்டானது, 2005 ஆம் ஆண்டில் உற்பத்திச் செய்யப்பட்டதென, விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலன்னறுவைப் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பசுக் கன்றை புதைப்பதற்காக, வீட்டுத்தோட்டத்தில்  குழி வெட்டிய போது, குழிக்குள் குறித்த குண்டு காணப்பட்டதை அவதானித்த வீட்டின் உரிமையாளர், உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள  பொலிஸார், குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவின் உதவியுடன், குண்டை  மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .