2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

வீரவன்சவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

Editorial   / 2018 ஜனவரி 12 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவுக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராய்ச்சி முன்னிலையில், அதிகுற்றப்பத்திரம் நேற்று (11) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விமல் வீரவன்ச, அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் தன்னுடைய சம்பளம் மற்றும் வருமானங்களைப் பயன்படுத்தி திரட்டமுடியாத, 75 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளை திரட்டியமை தொடர்பிலேயே, அதிகுற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   

இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால், விமல் வீரவன்சவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   
அந்த வழக்கு, நேற்று (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தான் நிரபராதி என விமல் வீரவன்ச எம்.பி, நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.  

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பிலான மேற்படி வழக்கை, அடுத்த மாதம் 19ஆம் திகதியன்று, விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு, மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .